மனிதன் மூச்சு விடுவதுபோல் காடு மூச்சுவிடுகிறதா? கோடிக்கணக்கானோரை வியக்க வைத்த அரிய காட்சி!

Science & Nature என்ற ட்விட்டர் பக்கத்தில், காடு மூச்சு விடுவதுபோல் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 21 வினாடிகள் ஓடும் அந்த காட்சியில், மனிதர்கள் விட்டு விட்டு மூச்சு விடுவதுபோல் காட்டிற்குள் ஒருபகுதியில் பூமியானது சற்று மேலே எழுந்து, பின்னர் கீழே அ.முங்குகிறது.

பார்ப்பதற்கு மண் மூச்சு விடுவது போல் இருக்கும் இந்த காட்சியானது பார்ப்போரை வியப்பில் ஆ.ழ்த்தியுள்ளது.

மேலும், இந்த அரிய காட்சியை கண்ட பலரும் காடு தான் மூச்சு விடுகிறது என பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

இதுபற்றி கூறிய ஆய்வாளர்கள், பலமாக காற்று அ.டிக்கும்போது மெலிதான வேர்களை கொண்ட நீண்ட மரங்கள் காற்றில் அசையும்போது அவை பிடித்துக்கொண்டிருக்கும் வலுவிழந்த மண் பகுதியானது மேலே எழும்பி, பின் கீழே அமுங்குவதால் பார்ப்பதற்கு அவை மூ.ச்சு விடுவதுபோல் தோன்றுகிறது என கூறியுள்ளனர்… நீங்களே பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published.