‘மண்ட பத்திரம்’ காமெடியில் வந்த இவரை ஞாபகம் இருக்கா..? இப்போ இவர் எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க…

By admin on ஆகஸ்ட் 15, 2022

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னாடி காமெடி நடிகராக விளங்கும் வடிவேலுவுடன் நடித்து பிரபலமானவர்தான் சக்திவேல். மண்ட பத்திரம் சக்திவேல் என்று இவருக்கு இன்னொரு பெயரும் உள்ளது. வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது என்னவோ இவர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றார். இணையத்தில் தேடினால் கூட இவரின் பெயர் அவ்வளவு இடம்பெறுவதில்லை.

   

அப்படிப்பட்ட இவர் சினிமா வாழ்க்கை குறித்து அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சினிமாவில் நடந்த பல்வேறு சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்து உள்ளார். கோவையில் பிறந்த இவர் சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்து வேலை பார்த்தார். அதன் பிறகு சிறிய சிறிய நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

   

 

முதலில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கிய இவருக்கு வில்லன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கட்டபொம்மன் திரைப்படத்தில் சரத்குமார் உடன் வில்லனாக நடித்திருப்பார். அதன் பிறகு தளபதி படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். அந்த அனுபவம் குறித்து பகிர்ந்த இவர், தளபதி படத்தில் ரஜினி சாரை தலைகீழா கட்டி அடிச்சேன்னு அவரோட ரசிகர்கள் என் மேல் செம்ம கோவத்துல இருந்தாங்க.

எங்க தலைவரையே கட்டி வச்சு அடிக்கிறயா உனக்கு அவ்வளவு தில்லா என்று திட்டி தீர்த்தார்கள். அவர்களுக்கு பயந்து கொண்டு திரையரங்கில் அந்த படத்தை நான் பார்க்கவே இல்லை. சண்டை மற்றும் அடிதடி என்று போய்க்கொண்டிருந்த எனது சினிமா வாழ்க்கை சுந்தர் சி மூலமாக மாறியது. தற்போதையெல்லாம் மண்ட பத்திரம் காமெடியை வைத்து நிறைய மீம்ஸ் வருகின்றது.

அதனை பார்க்கும் போது நான் ரசிப்பேன்.டிராபிக் போலீஸ் கூட ஹெல்மெட் விழிப்புணர்வுக்கு இந்த காமெடியை பயன்படுத்துகிறார்கள். திரும்பவும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வருவேன் என்று எனக்கு ஒரு நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.சினிமா வாழ்க்கை குறித்து அவர் மனம் திறந்து பேசி உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://bit.ly/3duLnUG