பெற்றோரின் அலட்சியத்தால் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நேர்ந்த கதி : எச்சரிக்கை செய்தி..!

By Archana on மே 5, 2021

Spread the love

தமிழகத்தில் பெற்றோரின் அலட்சியத்தால் பள்ளி மாணவி இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருப்பத்தூரை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் அட்சயா, அதேப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இரு சக்கர வாகனம் ஓட்டுவதில் அலாதி ப்ரியம் கொண்ட அட்சயா தனது தந்தையின் வாகனத்தை ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

   

இந்த நிலையில், அட்சயா கடைக்கு செல்வதற்காக பிற்பகல் வீட்டில் இருந்த தந்தையின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லொறி ஒன்று, எதிர்பாரத விதமாக அட்சயா வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

   

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லொறி ஓட்டுநர் சுதாகர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்ட 18 வயது ஆக வேண்டும் என்ற நிலையில் அதை மீறி அக்சயா ஓட்டியிருக்கிறார். இதை கண்டிக்காமல் அவர் பெற்றோர் ஊக்கமளித்து அலட்சியம் காட்டியதால் வாழவேண்டிய சிறுமி இன்று உலகில் இல்லாமல் போயுள்ளார்.

author avatar
Archana