பெட்ரோல் விலையை சமாளிக்க இப்படியொரு டெக்னிக்கா? இதோ நீங்களே பாருங்க… ஷா க் ஆகிடுவீங்க!..

By Archana

Updated on:

பெட்ரோல், டீசல் தினம் தோறும் விலை கூடி வருகிறது. நம்மவர்களும் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என பெட்ரோல் போடுவதற்குப் பதிலாக 100 ரூபாய், 200 ரூபாய் என பெட்ரோல் போடத் துவங்கிவிட்டதால் முதலில் இதன் பாதிப்பு அதிகம் உணரப்படவில்லை. ஆனால் இப்போது லிட்டர் விலையே நூறை நெருங்கும்போதுதான் அனைவருமே பத, பதத்துப் போகிறார்கள்.

   

பெட்ரோல், டீசல் செலவு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பொருள்களின் விலையேற்றத்துக்கும் காரணமாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு குடும்பத்தின் பட்ஜெட்டின் பெரும்பகுதியிலும் பெட்ரோல் விலை கைவைத்துவிடுகிறது. அதேநேரம் பெட்ரோல் போடாமலும் இருக்கமுடியாது. இப்படியான சூழலில்தான் ஒருவர் பெட்ரோல் விலையை சமாளிக்க சூப்பர் யுக்தியை செயல்படுத்தி வருகிறார்.

தனது மோட்டார் சைக்கிளில் பின்னாலேயே ஒரு இரும்பு வண்டியை இணைத்துள்ளார். பைக்கைப் போல் அதில் வேகமாக சுழலும் சக்கரமும் வைத்துள்ளார். அந்த வண்டியில் பத்துக்கும் அதிகமானோரை ஏற்றிக்கொண்டு தன்பைக்கில் பறக்கிறார். பைக்கின் பின்னால் சேர்த்து கட்டப்பட்டிருக்கும் அந்த இரும்பு வண்டியும் பைக்கோடு சேர்ந்து செல்கிறது. இதில் ஒரு டூவீலருக்கான பெட்ரோல் செலவில் பத்துபேர் நச்சென போகிறார்கள். மாட்டுவண்டியில் காளைக்குப் பதிலாக இந்த பைக்கை இணைத்திருக்கும் யுக்தி செம வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

author avatar
Archana