புயல் பாதிப்புக்கு மத்தியில் நடனமாடிய இளம் நடிகை! தீயாய் பரவும் சர்ச்சை புகைப்படம்... கடுப்பில் நெட்டிசன்கள் - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

புயல் பாதிப்புக்கு மத்தியில் நடனமாடிய இளம் நடிகை! தீயாய் பரவும் சர்ச்சை புகைப்படம்… கடுப்பில் நெட்டிசன்கள்

CINEMA

புயல் பாதிப்புக்கு மத்தியில் நடனமாடிய இளம் நடிகை! தீயாய் பரவும் சர்ச்சை புகைப்படம்… கடுப்பில் நெட்டிசன்கள்

நடிகை ஒருவர் டவ் தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி உள்ளார் கோரதாண்டவம் ஆடிய டவ்-தே புயல், குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்தன.

டவ்-தே புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. இந்த புயலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்தி நடிகை நடிகை தீபிகா சிங், டவ் தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். நடிகை தீபிகா சிங்கின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது, அதுவாகவே கடந்து போகும் என்று நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top