பிராங்க் செய்தவருக்கே பிராங்க் கொடுத்த நபர்…. காது ஜவ்வு கிழிஞ்சிருக்கும்…. செம வைரலாகும் வீடியோ…

பிராங்க் செய்தவரின் கன்னத்தில் நபர் ஒருவர் ஓங்கி அடித்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. youtube பக்கங்களை திறந்தாலே பிராங்க் வீடியோகள் தான் அதிகமாக வலம் பெறுகின்றது. இது அதிக பார்வையாளர்களை பெறுகிறது என்பதற்காக பலரும் youtube சேனல் ஆரம்பித்து பிராங்க் செய்து அதனை பதிவேற்றி வருகின்றனர். பிராங்க் என்பது நாளுக்கு நாள் எல்லையை கடந்து சென்று கொண்டுள்ளது .
இந்நிலையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ பிராங்க் செய்பவர்களுக்கு சம பதிலடியாக இருக்கும். அதாவது பிராங் செய்பவருக்கு பிராங்க் செய்த ஒருவரின் வீடியோ தான் இது. பிராங்க் குரூப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவரின் பின்னால் சென்று அவரது காதில் பிபியை வைத்து சத்தமாக ஊதுகிறார்.
இந்த ஒளியைக் கேட்டு நபர் திரும்பி எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் அவரிடம் அருகில் வந்து எதற்காக என் காதில் ஊதினாய் எனக் கேட்டு பலார் என்று கன்னத்தில் அடி விடுகிறார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிராங்கர் அதிர்ச்சியடைகிறார் . பிராங்க் குரூப்பில் இருந்தவர் அவரை சமாதானம் செய்யும் முயற்சி செய்கிறார். ஆனால் அவர் எதுவும் பதில் சொல்லாமல் சென்று விட்டார்.
When the prank goes wrong pic.twitter.com/Nk2HSeVKfW
— Lo+Viral 🔥 (@TheBest_Viral) December 16, 2022