பிரபல குணசித்ர நடிகை நித்யா-வின் மகளை பார்த்துளீர்களா..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

நடிகை நித்தியா ரவீந்திரன், ஒரு சில படங்களிலில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும், கவனிக்கப்படும் கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இவர் அடிப்படையில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். பாடல்களும் பாடியுள்ளார். இவர் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தது வெகுவாகப் பேசப்பட்டது. மேலும், கன்னடம், தெலுங்கு, மலையாளம் படங்களிலும்,

குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார் நித்யா ரவீந்திரன். மேலும், பிரபல டிவியில் ஒளிபரப்பாகிவரும், ‘நம்ம வீட்டு மீனாட்சி’ என்னும் தொடரிலும் நடித்துவருகிறார். அதுமட்டுமில்லாமல் அண்மையில் கூட நடிகர் தனுஷ் நடித்து இந்தியில் வெளியான “அட்ராங்கி ரே” படத்தில் நடிகர் தனுஷின் அம்மாவாக நடித்து இருந்தார் நடிகை நித்யா அவர்கள்.

மேலும், இவருக்கு அர்ஜுன் என்ற மகனும் மற்றும் ஜனனி என்ற மகளும் உள்ளனர் எனப்து இங்கே குறிப்பிடத்தக்கது. இப்போது இணையத்தில் முதன் முதலாக நடிகை நித்யா ரவீந்திரனின் மகள் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதோ அவருடைய மகளின் புகைப்படம்…