பழைய காலத்தில் இப்படித்தான் நேரத்தினை கணித்தார்களா? மணிகாட்டும் கல் எப்படி இருக்குன்னு பாருங்க…!

By Archana

Published on:

இப்போதெல்லாம் நேரம் பார்க்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் கைகளில் வாட்ச் கட்டியிருக்கிறார்கள். வீட்டுக்கு வீடு வால் கிளாக் இருக்கிறது. அதேபோல் செல்போன்களில் மணி பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால் முந்தைய காலங்களில் வெறுமனே ஆகாயத்தைப் பார்த்தே மணி சொன்னார்கள்.

   

அதேபோல் முந்தைய காலங்களில் நேரம் பார்க்க ஊருக்கு ஊர், மணிகாட்டும் கல்லும் இருந்தது. அது என்ன மணிகாட்டும் கல் என்கிறீர்களா? மணிகாட்டும் கல் என்பது கடிகாரத்தில் இருப்பதைப் போலவே ஒரு கல்லில் ஒன்று, இரண்டு என பனிரெண்டு வரை பிரித்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கல்லின் நடிவில் ஒரு துவாரம் இருக்கும். அந்தத் துவாரத்தில் ஒரு குச்சியை வைத்து, அதன் மேல் கல்லை வைக்கிறார்கள். இப்போது குச்சியின் நிழல் சரியாக நேரத்தின் மீது விழுகிறது.

இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் செய்திருக்கும் சோதனை முயற்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

author avatar
Archana