Connect with us

Tamizhanmedia.net

பரம ஏழையான மீனவன் !! கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் பல கோடிக்கு அதிபதி !! அப்படி என்ன பொருள் தெரியுமா ??

NEWS

பரம ஏழையான மீனவன் !! கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் பல கோடிக்கு அதிபதி !! அப்படி என்ன பொருள் தெரியுமா ??

தாய்லாந்தில் பரம ஏழையான மீனவர் ஒருவர் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கில வாந்தியால் தற்போது ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.அந்த மீனவருக்கு கிடைத்திருப்பது, உலகில் இதுவரை யாருக்கும் கிடைத்திராத மிக அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது.தாய்லாந்தின் தென் பகுதியில் வசிப்பவர் 60 வயதான மீனவர் Naris Suwannasang. இவருக்கே தற்போது சுமார் 100 கிலோ அளவுக்கு திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது.அம்பெர்கிரிஸ் என அறியப்படும் இந்த பொருளானது மிதக்கும் தங்கம் என்றே பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏழை மீனவர் நரிஸ் ஒருநாள் மாலை நேரம் தமது குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கடற்கரையில் நடக்க சென்றுள்ளார்.அப்போது ஒரு பகுதியில் பாறை போன்ற வெளிர் நிற கட்டிகள் கரை ஒதுங்கிக் கிடந்துள்ளது. ஒரு சந்தேகத்தின் அடிப்படையில், தமது உறவினரின் உதவியால், அந்த மொத்த கட்டிகளையும் அவர் சேகரித்து குடியிருப்பு கொண்டு வந்துள்ளார்.

ஆனால் அது என்னவென்று தெரியாத அந்த மீனவர், சிலரிடம் விசாரித்ததில், தமக்கு கிடைத்திருப்பது மிதக்கும் தங்கம் என்பதை அறிந்து கொண்டார்.சுமார் 100 கிலோ அளவுக்கு அந்த கட்டிகள் உள்ளன. தற்போது தொழிலதிபர் ஒருவர், அதன் தரத்திற்கு தகுந்தாற்போல் கிலோவுக்கு 23,740 பவுண்டுகள் விலையாக தரலாம் என மீனவரிடம் கூறியுள்ளார்.

மாதம் 500 பவுண்டுகள் கூட ஈட்ட முடியாத பரம ஏழையான மீனவருக்கு தற்போது சுமார் 2.4 மில்லியன் பவுண்டுகள் கிடைக்கப் போகிறது.இதனிடையே, தமக்கு கிடைத்துள்ள அம்பெர்கிரிஸ் கட்டிகளின் தரம் தொடர்பில் நிபுணர்கள் மூலம் சோதிக்க மீனவர் நரிஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top