CINEMA
நீண்ட கால கனவு நிறைவேறியது! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அஸ்வின்… காட்டுத் தீயாய் பரவும் வீடியோ
குக் வித் கோமாளி சீசன்2 முடிந்துள்ள நிலையில் அஸ்வின் அதிரடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறும்போது “எனது பல நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
ஹீரோவாக நான் முதல் படத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளேன். அதைப் பற்றி தான் தற்பொழுது உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த படம் ஒரு நல்ல மகிழ்ச்சியான திரைப்படமாக உருவாகிறது. அதுமட்டுமல்லாமல் நான் விரும்பும் ஒருவரும், நீங்கள் அனைவரும் விரும்பும் ஒருவரும் இந்த படத்தில் இருக்கிறார்.
அது வேறு யாருமில்லை புகழ்தான். நாங்கள் இருவரும் ஒரு ஹீரோ காமெடியனாக உங்களை நிச்சயம் மகிழ்விப்போம். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Yella pugalum irraivannukey 🙏🏻A dream come true💜 Thank you all 🙏🏻😇 pic.twitter.com/ZUjVxDRn0V
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) April 15, 2021