குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகிய பலர் தற்பொழுது பருவப் பெண்ணாக வளர்ந்து ஹீ ரோயின்கள் ரேஞ்சுக்கு தங்களது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இரண்டு வருகிறார்கள். இவர்களை தொடர்ந்து தற்போது இந்த லிஸ்டில் புதிதாக ஒருவர் சேர்ந்துள்ளார். அவர்தான் பேபி நயன்தாரா.
இவர் தற்போது தனது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். பேபி நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கியுள்ளார்.
அந்த வகையில் இது வரையிலும் இவர் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னணி நடிகையான நயன்தாரா உடன் இணைந்து குசேலன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ரஜினி, மம்மூட்டி ,மோகன்லால் உட்பட இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக ரஹ்மானுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார்.
அதன்பிறகு பேபி நயன்தாரா தனது படிப்பை பார்க்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 5 வருடங்கள் செய்வாபக்கம் தலை காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்…