தமிழ் சினிமா கொண்டாடிய பல முன்னணி நடிகைகள் இப்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர்.
அப்படி பிரபலமாக தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை சினேகா. தனக்கு இருந்து மார்க்கெட் நேரத்தில் நல்ல நல்ல படங்கள் நடித்து மக்கள் மனதில் நின்றுவிட்டார்.
மக்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு வைத்த பெயர் புன்னகை அரசி. ஏனெனில் அவரது சிரிப்பு அப்படி ஒரு அழகாக இருக்கும்.
சினேகா, பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் சினேகாவிற்கு இரண்டாவதாக மகள் பிறந்திருந்தார். மகளின் முதல் பிறந்தநாளை படு பிரம்மாண்டமாக இருவரும் கொண்டாடினார்கள்.
தற்போது சினேகா தனது மகள் மற்றும் மகனுடன் ஒரு அழகிய புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அவரது மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.