தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் சீயான் விக்ரம். இவரின் நடிப்புக்கே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தற்போது கோப்ரா படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இதுவரை அனைத்து ரசிகர்களும் விக்ரமின் மகன் துருவ் மற்றும் மகள் புகைப்படங்களை பார்த்திருக்கிறோம்.
ஆனால் பெரும்பாலானோர் விக்ரமின் மனைவியை பார்த்திருக்க மாட்டார்கள். விக்ரம் மனைவியின் பெயர் சைலஜா பாலகிருஷ்ணன்.
மேலும், சைலஜா சென்னையில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் சைக்காலஜி ஆசிரியராக வேலை செய்து வருகிறாராம்.
துருவ் மற்றும் விக்ரமின் மகள் அக்ஷிதா ஆகிய இருவருடனும் சைலஜா விளையாடும் புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் தேடி கண்டுபிடித்து சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.