தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஈடாக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பவர்கள் தான் துணை நடிகர்கள் , அப்படி மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்த ஒரு நடிகர் தான் காஜா ஷெரிப் , இவர் தமிழ் மொழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார் ,
இவர் தமிழில் புதிய வார் புகள் என்ற படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார், அதன் பிறகு உதிரிப்பூக்கள் , அந்த ஏழு நாட்கள் என பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் தற்போது திரைப்படத்தை விட்டு விலகி சிங்கப்பூர் , மலேசியா போன்ற நாடுகளில் காலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் ,
இவர் பற்றின எந்த ஒரு தகவல்களும் வெளிவராமல் இருந்த நிலையில் , தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சர்யம் அடைய வைத்து வருகின்றது , அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான இந்த புகைப்படமானது ரசிகர்களால் அவர்களது நண்பர்களுக்கு பகிரப்பட்டு வருகின்றது .,