தமிழ் திரையுலகை இந்தியஅளவில் திரும்பிப்பார்க்க வைத்த பிரபலங்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.இவர் தற்போது தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளார். இவரின் நடிப்பில் தற்போது கர்ணன், ஜகமே தந்திரம் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷுடன் சிறு வயதில் இருந்தே குக் வித் கோ.மாளி பிரபலம் ஒருவர் பள்ளியில் படித்துள்ளாராம். அது வேறுயாருமில்லை, குக் வித் கோ.மாளி சீசன் 2 பாபா பாஸ்கர் தான், நடிகர் தனுஷுடன் 8ஆம் வகுப்பு வரை ஒன்றாக இணைந்து படித்துள்ளார்.
இதனை நடிகர் தனுஷ் பிரஸ் மீட் ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் பாபா பாஸ்கர், தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன், மாரி, கோடி, ஜகமே த.ந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.