தொடர்ச்சியாக உறங்கும் 17 வயதுச் சிறுமி : முடிவு தெரியாமல் தவிக்கும் சிறுமியின் பெற்றோர் ..!

இந்தோனேஷியாவில் சிறுமி ஒருவர் மிகவும் அரிதிலும், அரிதான நோயால் பா.திக்கப்பட்டு தொடர்ந்து பல நாட்கள் தூங்கி வருவது பெற்றோரிடையே மிகுந்த வே.தனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் Banjarmasin பகுதியைச் சேர்ந்த Siti Raisa Miranda என்ற 17 வயது சி.றுமி கடந்த 2017-ஆம் ஆண்டு வீட்டில் தூ.ங்கிய போது, அதன் பின் 13 நாட்கள் தூங்கினார். இதனால் கடும் அ.திர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இது Kleine-Levin நோயின் அறிகுறி, இது ஒரு மில்லியன் மக்களில் ஒருவரை பாதிக்கும், மிகவும் அரிதிலும், அரிதான நோய் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும், எந்த ஒரு பலனும் இல்லை. இப்படி சிறுமி தொடர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவர் தூங்குகிறாரா? இல்லையா? என்பதை அறிய முடியாமல், பெற்றோர் அவரை உடனடியாக அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து, பத்து நாட்களுக்கு மேல் வைத்து மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.

சிறுமியின் பெற்றோர், அவள் தூங்கும்போதெல்லாம் அவள் நன்றாக இருக்கிறாள் என்பதை எப்படி உறுதிப்படுத்துவது என்று எங்களுக்குத் தெரியவில்லை, இதன் காரணமாகவே நாங்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறோம்.

அவர் இது போன்ற நிலையில் இருக்கும் போது, நாங்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. இது போன்ற சமயங்களில் எங்களுக்கு மருத்துவமனையின் உதவி தேவை, மகளின் உடல்நிலை குறித்து பரிசோதித்து பார்த்தால், அவள் நன்றாக இருக்கிறாள் என்று வரும், ஆனால் அந்த தூக்கம் தான் என்று வேதனையுடன் கூறினர்.

Kleine-Levin-க்கு இதுவரை எந்த ஒரு சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கவில்லை. இந்த சிறுமி தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானதால், இவரைக் கண்ட இணையவாசிகள், விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும், நிஜ வாழ்க்கையில் ஒரு Sleeping Beauty என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *