தொகுப்பாளினியின் பேச்சினால் மேடையிலிருந்து இ றங்கிய ஏ.ஆர்.ரகுமான்… ஏன் தெரியுமா?

By Archana on மார்ச் 30, 2021

Spread the love

ஹிந்தியில் பேசிய தொகுப்பாளரை கிண்டல் செய்யும் வகையில் ஏ.ஆர் ரகுமான் மேடையை விட்டு கீழே இறங்கிய காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏராளமான பாடல்களைப் பாடி இசையமைத்து ரசிகர்களின் பட்டாளத்தினை அதிகமாக வைத்துள்ளார். தற்போது 99 சாங்ஸ் என்ற திரைப்படத்தினை தயாரித்து, இதற்கான கதையினை அவரே எழுதியும் உள்ளார்.

   

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் இஹான் பட், எடில்சி வர்கீஸ் போன்றோர் நடித்துள்ளனர். ஏப்ரல் 16 அன்று வெளியாகவுள்ள 99 சாங்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றதையடுத்து, பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

   

 

அப்பொழுது மேடையில் படத்தின் ஹீரோவும், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அத்தருணத்தில் தொகுப்பாளினி ஹீரோவிடம் ஹிந்தியில் பேச முயன்றபோது, உடனே ரகுமான் ஹிந்தி என கூறி விட்டு சிரித்துக் கொண்டே மேடையிலிருந்து இறங்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மானின் இந்த கிண்டலை கண்ட ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

 

author avatar
Archana