திருமணமாகி 8 வருடம் கழித்து…. குட் நியூஸ் சொன்ன இயக்குனர் அட்லீ…. புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்…

திருமணமாகி 8 வருடம் கழித்து…. குட் நியூஸ் சொன்ன இயக்குனர் அட்லீ…. புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார். அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அட்லியின் மனைவி பிரியா சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து பிரியா தற்போது கர்ப்பமாக உள்ள செய்தியை அட்லி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)

Archana