தாவணிக்கனவுகள் படத்தில் பாக்யராஜின் நான்காவது தங்கையாக நடித்த பிரபலம் யார் தெரியுமா.?

தமிழ்சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை தயார்படுத்திக் கொண்டு களத்தில் குதித்த வெற்றிகண்டவர் தான் பாக்யராஜ். இவர் 1977ஆம் ஆண்டு 16 வயதிலேயே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் பக்யராஜ். இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்த வகையில் இவர் கிழக்கேபோகும்ரயில், சிகப்பு ரோஜாக்கள், முந்தானை முடிச்சு ,தாவணி கனவுகள், நான் சிகப்பு மனிதன், சின்ன வீடு போன்ற படங்களில் நடித்து தன்னை நடிகனாக பிரபல படுத்துக்கொண்டார் அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் இவர் இயக்குனராகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் இவர் இயக்கிய படங்கள் மாபெரும் வசூல் சாதனையும் பெற்றுள்ளன அவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நபராக தற்போது வரை விளங்கி வருகிறார்.

இவர் 1984 ஆம் ஆண்டு தாவணிக்கனவுகள் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கி நடித்திருந்தார் இப்படத்தில் அவருக்கு நான்கு தங்கைகள் அந்த நான்கு தங்கைகளில் கடைசி தங்கை இப்படத்தில் தனது பேச்சாலும், நகைச்சுவை திறனாலும் அதிகப்படியான ரசிகர்களைக் கவர்ந்தார். இப்படத்தில் அவர் பெரிதும் பாராட்டப்பட்டார் இப்படத்தில் நடித்த சிறுமி யார் என்று உங்களுக்கு தெரியுமா அவர் வேறு யாருமில்லை.

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் டிடியின் அக்காதான் பிரியதர்ஷினி இவர்தான் இப்படத்தில் நான்காவது சிறுமியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.படத்தினை தொடர்ந்து அவர் தமிழில் நாகம், குற்றவாளிகள், இதயகோயில் என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *