Connect with us

தாய் மற்றும் தந்தையை 2 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த இளம் பிள்ளைகள் : பின்னர் நேர்ந்த மற்றொரு சோகம்!!

NEWS

தாய் மற்றும் தந்தையை 2 நாள் இடைவெளியில் அடுத்தடுத்து இழந்த இளம் பிள்ளைகள் : பின்னர் நேர்ந்த மற்றொரு சோகம்!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பெற்றோரையும், பாட்டியையும் இழந்து இரண்டு சிறுவர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் தன்ராஜ் (45).

மருந்து கடை உரிமையாளர். இவருடைய மனைவி ஜெயந்தி (40). இவர்களுடைய மகன் விபின் (15). 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சாமுவேல் (8) 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

   

   

இவர்களது குடும்பம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் தன்ராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் சேர்ந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 15-ந் திகதி இறந்தார்.

 

அவரை உடனிருந்து கவனித்து வந்த அவருடைய மனைவி ஜெயந்திக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், கணவர் இறந்த 2 நாட்கள் கழித்து 17-ந் திகதி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஜெயந்தியை உடனிருந்து கவனித்த அவருடைய தாய் பத்மா துரைக்கு (60) தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவரும் கடந்த வாரம் கொரோனாவுக்கு பலியானார். ஒரே குடும்பத்தில் பெற்றோர் மற்றும் பாட்டி என 3 பேர் அடுத்தடுத்து இறந்ததால் அந்த சோகத்தை தாங்க முடியாமல் விபின், சாமுவேல் ஆகியோர் கண்ணீருடன் சோகத்தில் தவித்து வருகின்றனர்.

சிகிச்சை பெற வேண்டும் இந்த நிலையில் தன்ராஜின் தாய் சாரதா (65) தனது பேரக் குழந்தை கள் விபின், சாமுவேல் ஆகியோரை தற்போது பராமரித்து வருகிறார்.

பெற்றோரை இழந்த விபின், சாமுவேல் ஆகியோர் கூறுகையில் கொரோனா சிகிச்சைக்கு சென்ற அப்பா, அம்மா திரும்பி வர வில்லை. அவர்களை இழந்து நிற்கும் எங்களின் உயர்கல்விக்கு யாராவது உதவ வேண்டும் என்றனர்.

author avatar
Archana
Continue Reading
You may also like...

More in NEWS

To Top