தனி விமானத்தில் மகளுடன் சென்ற நடிகர் ரஜினிகாந்த்…. கூடவே யார் போனாங்க தெரியுமா..? வைரல் புகைப்படம் இதோ….

தனி விமானத்தில் மகளுடன் சென்ற நடிகர் ரஜினிகாந்த்…. கூடவே யார் போனாங்க தெரியுமா..?  வைரல் புகைப்படம் இதோ….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படும் ரஜினிகாந்த். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இதனிடையே அண்மையில் ரஜினியின் தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் சுவாமி தரிசனம் செய்த ரஜினியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

தற்போது ரஜினி அவரின் மகளுடன் கடப்பாவில் இருக்கும் புகழ் பெற்ற தர்காவுக்கு ஆன்மீகப் பயணம் சென்றுள்ளார். தனி விமானத்தில் ரஜினிகாந்த், ஏ ஆர் ரகுமான், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பயணம் செய்த நிலையில் அப்போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana