NEWS
தந்தைக்கு உதயநிதி கொடுத்த சர்ஃப்ரைஸ் கிஃப்ட்..! – பூரித்துபோன மு.க ஸ்டாலின்..! வைரலாகும் ட்விட்டர் பதிவு..!
பல்வேறு சவால்களை முறியடித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
மேலும், பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராகவும், அவரது தலைமையில் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து, இந்த விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஸ்டாலின் குடும்பத்தினர், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது மகன் உதயநிதி ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த ஓவியமானது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட மூவரும் சேர்ந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினை வாழ்த்துவது போல உள்ளது.
மேலும், இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக – தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவதுபோன்ற ஓவியத்தை பரிசளித்தோம்.
இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும் என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக – தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் @mkstalin அவர்களுக்கு
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும். pic.twitter.com/DXw3tJrWAH— Udhay (@Udhaystalin) May 7, 2021