தங்களின் பாரம்பரிய நடனம் மூலமாக…. உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்…. செம வைரலாகும் வீடியோ…

தங்களின் பாரம்பரிய நடனம் மூலமாக…. உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்…. செம வைரலாகும் வீடியோ…

ஜபல்பூர் ரயில் நிலையத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் பயணிகளுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம் தான்.

பெரும்பாலும் நாடு விட்டு நாடு செல்லும் போது ஒரு நாட்டினர் மற்றொரு நாட்டினருக்கு வரவேற்பு அளிப்பார்கள். அதிலும் தலைவர்கள், அரசியல்வாதிகள், முக்கிய பிரபலங்கள் யாராவது ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு பாரம்பரிய நடனம், பாடல் மூலமாக வரவேற்பு அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றது. காசி தமிழ் சங்கமம் என்று நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செல்லும் பயணிகளுக்கு ஜபல்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பெண்கள் பிரதிநிதிகள் பாரம்பரிய நடனம் மூலம் தங்களது கலாச்சாரத்தை வெளிப்படுத்தி நடனமாடினர். ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

Archana