சைக்கிளில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்ததுக்கு இது தான் காரணமா? இணையத்தில் பரவி வரும் பரபரப்பு தகவல் - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

சைக்கிளில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்ததுக்கு இது தான் காரணமா? இணையத்தில் பரவி வரும் பரபரப்பு தகவல்

CINEMA

சைக்கிளில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்ததுக்கு இது தான் காரணமா? இணையத்தில் பரவி வரும் பரபரப்பு தகவல்

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் தங்களின் வாக்குப்பதிவை செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி,கமல், அஜித், சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வாக்குப்பதிவு செய்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த சைக்கிளில் புறப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் நடிகர் விஜய் வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி அமைந்திருப்பதாலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், பெட்ரோல் விலை உயர்வுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவர் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top