CINEMA
சூர்யாவை இப்படி தான் வெறுப்பேத்துவேன்! பல நாள் ரகசியத்தை பகிர்ந்த குறும்புக்கார கார்த்தி… காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவரின் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை இவர் கொண்டுள்ளார். இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இப்படி நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யாவும் கார்த்தியும் தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்களாக வலம் வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி சிறு வயதில் தனது அண்ணனுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். மேலும் மறக்கமுடியாத சில நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது “எனது அண்ணனை வெறுப்பேற்ற ஒரே வழி, அவர் அணிந்திருக்கும் சட்டையை போலவே நானும் அணிந்து கொள்வேன். மீண்டும் அப்படி முயற்சி செய்ய ஆசையாக இருக்கிறது. நீங்களும் உங்கள் சகோதரர்களுடன் இப்படி உடை அணிந்தது உண்டா?” என்று பதிவிட்டுள்ளார்.