சிவகார்த்திகேயனை தொடர்ந்து முக்கிய நடிகரின் திரைப்படத்தில் குக் வித் கோ மாளி ஷிவாங்கி, யார் படம் தெரியுமா?

By Archana

Published on:

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோ மாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

   

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமான நட்சத்திரம் தான் ஷிவாங்கி, இவர் சின்னத்திரையை தொடர்ந்து தற்போது பெரிய திரையிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் ஷிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் உடன் டான் படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருடன் மேலும் சில குக் வித் கோமாளி பிரபலங்களும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஷிவாங்கி மேலும் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் நடிக்கவுள்ளார். ஆம், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தில் தான் ஷிவாங்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படம் பாலிவுட்டில் மிக பெரிய தா க்கத்தை ஏற்படுத்திய Article 15 படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Archana