சமூகம் பெரிய இடம் போல… முதுகு சொறிய ஜே.சி.பியா… என்னடா நடக்குது இங்க? வீடியோ இதோ..!

By Archana

Published on:

அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பார் என்பார்கள். அதை மெய்ப்பிக்கும்வகையில் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

   

சிலர் எப்போதாவது வித்தியாசமாக செய்வார்கள். சிலர் எப்போதுமே எதையும் வித்தியாசமாகவே செய்வார்கள். அதில் இவர் இரண்டாம் ரகம். எதையும் வித்தியாசமாக செய்வார். ஆனாலும் இப்போது இவர் செய்திருப்பது கொஞ்சம் ஓவர்தான். அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்கள். மனிதருக்கு கடுமையான அரிப்பு. கைகளை வைத்து சொரிந்து பார்த்தவர், ஒருகட்டத்தில் அரிப்பு நிற்காமல் ஜே.சி.பி வைத்து சொரியத் தொடங்கிவிட்டார். ஜேசிபியில் கை போல் குவித்து நிற்கும் பகுதியில் தன் முதுகைக் கொடுத்து சொரிய வைத்திருக்கிறார் இந்த பெரியவர்.

இதுதொடர்பான வீடியோ யூடியூப்பில் வைரல் ஆகிவருகிறது. அதேநேரம் அரிப்பு கொஞ்சம் ஓவர்தான் போல! என்றும், முதுகுத் தோல் கிழிந்து வரப் போகிறது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

author avatar
Archana