தென்னிந்திய சினிமாவில் ஒரு திரைப்படமானது வெற்றி அடைய துணை கதாபாத்திரங்களுக்கு பங்கு உண்டு , அவர்களின் நடிப்பும் தற்போதெல்லாம் நல்ல ரீச் அடைந்து வருகின்றது , அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்திலும் , அஜித் நடிப்பில் வெளியான அமர்க்களம் திரைப்படத்திலும் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் மனிஷ் ,
இவர் தமிழ் , கன்னடம் , ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும் , இதனாலே இவரை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விடவே முடியாது ,
அது மட்டும் இல்லாமல் மின்னலே , பார்த்தேன் ரசித்தேன் , நீ ரொம்ப அழகா இருக்க , போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் , அதும் மட்டும் இன்றி பி .சி .ஸ்ரீராம் இயக்கிய சொன்னால் தான் காதலா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ,