Connect with us

Tamizhanmedia.net

கல்யாணப்பொண்ணு என்ன அழகா டேன்ஸ் ஆடுறாங்க பாருங்க… சினிமா ஹீரோயின்களையே மிஞ்சும் அழகு.. வைரலாகும் வீடியோ

VIDEOS

கல்யாணப்பொண்ணு என்ன அழகா டேன்ஸ் ஆடுறாங்க பாருங்க… சினிமா ஹீரோயின்களையே மிஞ்சும் அழகு.. வைரலாகும் வீடியோ

திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சேரும் போது கல்யாண ஆல்பம், வீடியோத் தொகுப்புகள் செம கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.

இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது. சகதியில் இருந்து புரளும் ஜோடி, கேரளத்தில் கட்டிட வேலை செய்வது போல் சூட் செய்யப்பட்ட ஜோடி என போஸ் வெட்டிங் சூட்டாலேயே பேமஸான பல ஜோடிகள் உண்டு. அதையெல்லாம் விட இதில் சம்மந்தமே இல்லாமல் மேடை ஏறி ஆட்டம் போட்டு லைக்ஸ்களைக் குவிக்கும் மணமக்களின் தோழிகளும் உண்டு.

அதேபோல் இப்போதெல்லாம் கல்யாண மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஹிட் அடித்த பாடலுக்கு நடனமாட வைத்து அதை வீடியோவாக எடுப்பதும் பேஷன் ஆகிவிட்டது. அந்த வகையில் இங்கேயும் ஒரு ஜோடி அசுரன் படத்தில் இடம்பெற்ற கத்தரி பூவழகி பாடலுக்கு பட்டையைக் கிளப்புகின்றனர். அதிலும் இதில் சிரித்த முகத்தோடு ஹீரோயின் ஆடும் ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைக்கிறது. சினிமா ஹீரோயின் போலவே செம லுக்காக அதில் இருக்கிறார் மணப்பெண். மாப்பிள்ளையும், பொண்ணும் முறையாக பயிற்சி எடுத்துக்கொண்ட தேர்ந்த நடன கலைஞர்கள் போல பட்டையைக் கிளப்புகின்றனர். அதிலும் மணப்பெண்ணின் அந்த க்யூட் ரியாக்‌ஷனுக்கு லைக்ஸ்கள் குவிந்துவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

Continue Reading
You may also like...

More in VIDEOS

To Top