கருத்தம்மா திரைப்படத்தில் நடித்த மகேஸ்வரியா இது.! 42 வயதிலும் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

மகேஸ்வரி ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழில் இவர் முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு கருத்தம்மா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர், அந்த திரைப்படத்தை ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த அளவு அந்த திரைப்படம் மிகவும் பிரபலமடைந்தது, இதனைத்தடர்ந்து பாஞ்சாலம் குறிச்சி, நேசம் ஆகிய திரைப்படத்தில் நடித்து வந்த இவர் அஜித்தின் உ ல்லாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இவர் என்ன தான் முன்னனி நடிகையாக வலம் வந்தாலும் 2000 வருடத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் ஓட வில்லை. அதனால் அதிரடியாக இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார், மகேஸ்வரி பேஷன் டிசைனிங் படித்தவர். ஆனால் பேஷன் டிசைனிங் வேலையை விட்டுவிட்டு நடிப்பதில் முழுக்கவனம் செலுத்தினாலர். பின்பு இந்தியாவில் புகழ்பெற்ற நடிகையான ஸ்ரீதேவிக்கு காஸ்டியூம் டிசைனராக வேலை பார்த்தார் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி, மகேஸ்வரிக்கு அத்தை முறை என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

நடிகை மகேஸ்வரி தனக்கு எது வருமோ அதை அப்படியே பிடித்து ஏறும் திறமை கொண்டவர். இவரின் வெற்றி படிக்கு உறுதுணையாக இருந்தது நடிகை ஸ்ரீதேவி தான். இதனை மகேஸ்வரியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார், கடைசியாக நடிகை ஸ்ரீதேவி பத்மஸ்ரீ விருது வாங்கும் பொழுது அணிந்திருந்த அந்த உடையை மகேஸ்வரி தான் தயார் செய்தாராம்.

இந்த நிலையில் தற்பொழுது மகேஸ்வரி எப்படி இருக்கிறார் என்பது பல ரசிகர்கள்களின் கேள்வியாய் இருந்து வருகிறது, இதோ மகேஸ்வரியின் சமீபத்திய புகைப்படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *