கணவர் இறப்புக்கு பிறகு…. முதன்முறையாக ஃபாரின் ட்ரிப் சென்ற மீனா…. அதுவும் யாருடன் தெரியுமா….????

By Archana on செப்டம்பர் 28, 2022

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

   

இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

   

 

இதனிடையே கணவரின் மறைவுக்குப் பிறகு மீனாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அவரின் நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அவ்வகையில் மீனாவின் நெருங்கிய தோழியான கலாம் மாஸ்டர் அவரை அடிக்கடி நேரில் சந்தித்து ஆறுதலாக பேசி வருகிறார்.

சமீபத்தில் மீனா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பல திரை பிரபலங்களும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினர்.இந்நிலையில் நடிகை மீனா தனது தோழிகளுடன் பாரின் ட்ரிப் சென்றுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.