கடல் நத்தையை வறுத்து சாப்பிட்டு கொண்டிருந்த நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்! உள்ளே என்ன இருந்தது தெரியுமா? ஆச்சரிய தகவல்

தாய்லாந்தில் மனைவியுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவனுக்கு அரிதான முத்து ஒன்று கிடைத்துள்ளது.

தாய்லாந்தின் வடகிழக்கு புரிராம் மாகாணத்தை, சேர்ந்த பொலிஸ் அதிகாரியான Lieutenant Colonel Phongsakorn Chantana, இந்த வாரம் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்த வறுத்த கடல் நத்தைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போடு அவரது ஏதோ தன்னுடைய வாயில் சோள விதை அளவிற்கு ஏதோ உருண்டையாக வாயில் சிக்கியுள்ளதை உணர்ந்த அவர், அதை வெளியில் எடுத்துள்ளார்.

அதை பார்த்த போது, அவருக்கு மெலோ முத்து(Melo pearl) போன்று இருக்கிறதே என்று உற்றுப் பார்க்க, அதை மொலோ முத்து தான் என்பதை உறுதி செய்துள்ளார்.

இது உலகில் மிகவும் அரிதாக கிடைக்கும் முத்து வகைகளில் ஒன்று என்பதால், இதன் விலை பல மடங்கு போகும். கடந்த காலத்தில் இத் போன்ற முத்துக்கள் 250000 பவுண்ட் (6,65,03,136 கோடி ரூபாய்0-க்கு விற்கப்பட்டுள்ளதால், அதே விலைக்கு இது போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தம்பதியிடன் மேலும், இதை உறுதிபடுத்துவதற்காக, அருகிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு சோதனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து Lieutenant Colonel Phongsakorn Chantana கூறுகையில், இது ஒரு மெலோ முத்து என்று எங்களுக்கு ஒரு வலுவான நம்பிக்கை இருக்கிறது,.

ஆனால் இது நாம் முன்பு பார்த்ததை விட சிறியது, எனவே நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம். நாங்கள் முத்துவை பரிசோதிக்க அனுப்புவோம்.

அது உண்மையில் ஒரு மெலோ முத்து என்றால், நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நல்ல அதிர்ஷ்டத்திற்காக நாங்கள் அதை வைத்திருப்போம் என்று கூறியுள்ளார்.

இது போன்ற முத்துக்கள் தென் சீனக் கடல் மற்றும் தாய்லாந்து, மியான்மர், வியட்நாம் மற்றும் கம்போடியாவைச் சுற்றியுள்ள மெலோ நத்தைகளிலிருந்து கிடைப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *