ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 தடவை விவாகரத்து செய்த கணவன்- இப்படியும் வினோதமான காரணம்!!

விடுமுறை எடுப்பதற்காக வங்கி ஊழியர் ஒருவர் திருமணம் செய்த பெண்ணையே திரும்ப திரும்ப திருமணம் செய்து விவகாரத்து செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டில் வங்கியில் பணிபுரியும் நபர் ஒருவர் திருமணத்திற்காக 8 நாட்கள் விடுப்புக்கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இதையடுத்து, சில நாட்களில் அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் அந்த பெண்ணையே திருமணம் செய்து மீண்டும் 8 நாட்கள் விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இப்படி அவர், 37 நாட்களில் மட்டும் 4 முறை திருமண விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்து வங்கி நிர்வாகம் விசாரிக்கையில் அவர் சம்பளத்துடன் கூடிய விடுமுறைக்காக ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவரது சம்பளத்துடன் கூடிய விடுமுறை விண்ணப்பங்களை ரத்து செய்து அவரது மாத சம்பளத்தை பிடித்தம் செய்துள்ளது.

மேலும், வங்கி நிர்வாகம். தைவான் சட்டத்தை இப்படி நூதனமாக வங்கி ஊழியர் பயன்படுத்திய விதம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *