NEWS
ஏழ்மையை வென்று கிரிக்கெட் உலகில் சாதித்து வரும் தமிழன் நடராஜன்! அவரின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சாதனை கிரிக்கெட் தமிழன் நடராஜனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன் சேலம் மாவட்டத்தில் 1991ஆம் ஆண்டு பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த நடராஜன் பின்னாளில் கிரிக்கெட் மீது கொண்ட காதலால் அதில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார்.
பல்வேறு கடினமான சூழல்கள் மற்றும் தடைகளை தாண்டி இன்று இந்திய கிரிக்கெட் அணிக்காக நடராஜன் விளையாடி வருகிறார். நடராஜனுக்கு பவித்ரா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். நடராஜனுக்கு கிரிக்கெட் விளையாடுவது மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் வருமானம் கிடைக்கிறது.
விக்கிபார்ன் இணையதளத்தின் கூற்றுப்படி அவரின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ. 4ல் இருந்து 5 கோடியாக உள்ளது. இதோடு தனது சொந்த ஊரில் பெரிய வீட்டை அவர் கட்டியுள்ளார். அவரின் மாத சம்பவம் தோராயமாக ரூ 1 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.