ஏழ்மையிலும் வியக்கவைக்கும் சிறுவனின் நேர்மை… தவற விட்ட பர்ஸை சொந்தகாரர் வரும்வரை காத்திருந்து திருப்பி கொடுத்த சிறுவன்…!

By Archana

Published on:

நேர்மையாக இருப்பது என்பது பெரிய கலை. அப்படி அனைவராலும் இருந்துவிட முடியாது. என்ன தான் கோடீஸ்வரராக இருப்பவரும் கூட நேர்மையாக இருப்பவர் என சொல்லிவிட முடியாது. ஆனால் சில இடங்களில் மிகவும் ஏழ்மைநிலையில் இருப்பவர்கள்கூட நேர்மையாக இருப்பார்கள். இதுவும் அப்படியான ஒரு சம்பவம் தான்.

   

ஒரு பெரிய கோடீஸ்வரர் தன் காரை நிறுத்திவிட்டு இறங்கிப் போனார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த பர்ஸானது தவறுதலாக கீழே விழுந்தது. அந்த வழியாக வந்த ஒரு பொடியன் கார் அருகே கிடந்த பர்ஸை எடுத்தான். தொடர்ந்து மூடப்பட்டிருந்த கார் கண்ணாடியை தட்டி பார்த்தான். காருக்குள் யாரும் இல்லை. அதை தெரிந்துகொண்டாலும் பர்ஸோடு அங்கு இருந்து பொடியன் சென்றுவிட வில்லை.

காரின் ஓனர் வரும்வரை அங்கேயே காத்திருந்தான். கார் ஓனர்,வந்ததும் பர்ஸைக் கொடுத்தான். அந்தப் பொடியனின் நேர்மையைப் பாராட்டிய கார் ஓனர், பர்ஸில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்து அந்தச் சிறுவனுக்குக் கொடுத்தார். அவனோ, அதை வாங்காமல் மறுத்துவிட்டான், ஏழ்மை நிலையிலும் அந்த சிறுவனின் நேர்மை பார்ப்போரை மெய்சிலிக்க வைத்துள்ளது.

author avatar
Archana