என் பரம்பரையிலேயே நான் தான் கார் வாங்கியிருக்கேன்… க ண்ணீர் விட்ட ஜி.பி முத்து : இணையத்தில் வைரலாகும் வீடியோ

By Archana

Published on:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி. முத்து யாருனு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் என்று சொல்லும் அளவிற்கு டிக் – டாக் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகினார்.

   

தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள முத்துவிற்கு 4 குழந்தைகள் உள்ளனர் . பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும், மரக்கடை ஒன்றை நடத்தி வந்தார்.

தொடக்கத்தில் பொழுது போக்கிற்காக டிக் -டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்த ஜி.பி முத்து, ஒரு கட்டத்தில் டிக் டாக்கே கதி என்று கிடந்தார். இதனால் தான் பார்த்து வந்த தொழிலும் கைநழுவி போனது. அதே நேரத்தில் டிக் – டாக்கில் வெற்றி கொடி நாட்டி வந்த ஜி.பி முத்துவிற்கு டிக் டாக் தடை என்ற செய்தியும் பே ரிடியாய் வி ழுந்தது.

ஆனால் தளர்ந்து விடாமல், ர வுடி பேபி சூர்யாவுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் களம் இறங்கினார் .

அதனை தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி காமெடி ஷோக்களில் தோன்றி , தனது ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். இதன் மூலம் ஜி.பி முத்துவின் கிராஃப் உயரத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜிபி. முத்து second handed car ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஜிபி.முத்து , தனது பரம்பரையிலேயே கார் வாங்கிய முதல் நபர் தான் தான் என்று ஆனந்த க ண்ணீருடன் தெரிவித்துள்ளார். ஜி.பி முத்துவின் புதிய கார் குறித்த செய்தி இணையத்தை கலக்கி வருகிறது.

 

author avatar
Archana