என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?…. தனுஷ் செய்த செயலால்….. அசிங்கப்பட்ட நடிகை நித்யா மேனன்….!!!!

By admin on ஆகஸ்ட் 26, 2022

Spread the love

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

   

இவர் தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்தத் திரைப்படம் அண்மையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நான்கே நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

   

 

திருச்சிற்றம்பலம் படத்தில் சோபனா என்ற கேரக்டரில் நடித்துள்ள நித்தியா மேனனின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது . நாட்டாமை திரைப்படத்தின் மூலம் தாய் கிழவி என்ற பெயர் பிரபலமான நிலையில் அந்த பெயரை வைத்து பாடல் எழுதலாம் என்று சிந்தித்த தனுஷ் திருச்சிற்றம்பலத்தில் அந்த பாடலை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்தப் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான நிலையில் அதனை வைத்து நித்யா மேனனை பலரும் தாய்க்கிழவி என்று அழைத்து வருகிறார்கள்.  இதனைத் தொடர்ந்து,ரசிகர்கள் யாரும் தாய் கிழவி என்று அழைக்க வேண்டாம் என்றும் தனக்கு அப்படி கூப்பிடுவது பிடிக்காது எனவும் நித்திய மேனன் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.