என்னால் பேச முடியவில்லை..என் உடல் என்னை கைவிடுகிறது… உயிரிழப்பதற்கு முன் 7 மாத கர்ப்பிணி பெண் பேசிய எச்சரிக்கை வீடியோ..

By Archana

Published on:

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை உ.லுக்கி வருகிறது. பெருந்தொற்று காரணமாக உ.யிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரவீஸ் சாவ்லா என்ற நபரின் மனைவி டிம்பிள் ஏழு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் உ.யிரிழந்துள்ளார். அவர் வயிற்றில் இருந்த கு.ழந்தை உ.யிரிழந்த அடுத்த நாள் டிம்பிளின் உ.யிரும் பி.ரிந்துள்ளது.

   

இறப்பதற்கு முன்னர் அவர் மற்றவர்களுக்கு எ.ச்சரிக்கை அளிக்கும் விதத்தில் பேசிய வீடியோவை ரவீஸ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், கொரோனாவை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள்…! மோசமான அறிகுறிகள் எனக்கு.. என்னால் பேச முடியவில்லை.

உங்கள் அருகிலுள்ள அன்பானவர்களின் பா.துகாப்பிற்காக மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது மாஸ்க் அணியுங்கள். தயவுசெய்து பொறுப்பற்றவர்களாக இருக்காதீர்கள், ஏனென்றால் உங்கள் வீட்டில் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இருக்கலாம்.

நான் எப்போதும் வேலை செய்ய விரும்புகிறேன். நான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன், ஆனால் என் உடல் இப்போது என்னை கைவிடுகிறது என உருக்கமாக பேசியுள்ளார். மனைவி இறந்த பிறகு பேசிய ரவீஸ், எங்களின் மூன்றரை வயது மகன் அம்மா எங்கே என கேட்கிறான்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, கர்ப்பமாக இருக்கும் போது எனக்கு கொரோனா வரக்கூடாது என அவள் கூறுவாள். ஆனால் அந்த வைரஸ் தா.க்.கி.யே எ.ன்னை விட்டு சென்றுவிட்டாள் என வேதனையுடன் பேசியுள்ளார்.

author avatar
Archana