VIDEOS
உலகமே அழிந்தே போனாலும் அதுமட்டும் அடங்காது..? வைரலாகும் வீடியோவால் கொந்தளித்த இயக்குநர்..
தமிழ் சினிமாவில் சாதிகள் பற்றிய படங்கள் ஒருசில இயக்குநர்களே இயக்கி வெற்றி பெருகிறார்கள். அதுபற்றி படங்கள் எடுக்கவும் இயக்குநர் தயங்குகிறார்கள். அதற்கு காரணம் படம் வெளிவந்தால் எதிர்ப்புகள் பல சந்திக்க நேரிடும் என்று தான். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தா சில இயக்குநர்களில் ஒருவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி படம் ஒன்றினை நடிகர் தினேஷை வைத்து இயக்கி ஓரளவிற்கு வெற்றியை பெற்றார். இதையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தினை எடுத்து பெரியளவில் நிரந்தரமான அந்தஷ்த்தை பெற்றார்.
இதன்மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின், கபாலி, காலா போன்ற படங்களில் இயக்கி, கலவை விமர்சனம் பெற்றும் வசூல் ரீதியாக தோல்வியை கொடுத்தது. படங்களை தாண்டி சாதியம் பற்றி எங்கு சென்றாலும் பேசி வரும் பா ரஞ்சித், சமீபத்தில் கொரானா வைரஸை கண்டுகொள்ளாமல் சாதி சம்பவம் வீடியோவை பார்த்து கொந்தளித்து பதிவிட்டுள்ளார்.
ஒருசில மதிப்புமிக்க பெரியவர்களை காலில் சிலர் காலில் விழும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவை பல பிரபலங்கள் எதிர்த்து கண்டனக்குரல் விடுத்தும் புகாரளித்தும் வந்த நிலையில், பா ரஞ்சித்தும் எதிர்த்து டிவிட்டர் பதிவில் குரல் கொடுத்துள்ளார்.
சாதி வெறியர்களுக்கு
தொற்று பெரிதல்ல!!
தீண்டாமை ஆணவமே பெரியது!!விழுப்புரம் மாவட்டம்
திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒட்டனந்தல் கிராமத்தில் பஞ்சாயத்து என்ற பெயரில்
காலில் விழ வைக்கும் தீண்டாமை கொடுமையை மிக வன்மையாக கண்டிப்போம்!!@beemji pic.twitter.com/jFk6MZLncn— நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) May 15, 2021