இரண்டாவது திருமணம் செய்யவிருக்கும் விஷ்ணு விஷாலின் மகனா இது?

By Archana

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

   

தனது முதல் படத்திலையே இவர் பல விருதுகளை வாங்கிய இவர், கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடித்து வந்தார்.

 

கடைசியாக இவர் நடித்த ராட்சசன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 

கடந்த 2011ம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளரான ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு ஆர்யான் என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில் சில வருடங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையில் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால்.

தற்போது பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை வரும் 22ம் திகதி இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில் தற்போது இவரது மகனின் புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது. முதல் மனைவியை பிரிந்த போதிலும், தனது மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் விஷ்ணு விஷால் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Archana