Connect with us

Tamizhanmedia.net

இயக்குனர் மணி ரத்னம் மற்றும் சுஹாசினியின் மகனை பார்த்துளீர்களா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

CINEMA

இயக்குனர் மணி ரத்னம் மற்றும் சுஹாசினியின் மகனை பார்த்துளீர்களா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

கோபால ரத்னம் சுப்ரமணியம் இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை எனப் பலத் துறைகளில் தடம் பதித்தவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. காதல், தீ வி ர வா தம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி. இவருடைய படங்கள் சிறப்பான திரைக்கதைக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும், சுருக்கமான வசனங்களுக்கும், பெயர் பெற்றவை.

   

யாரிடமும் உதவி இயக்குநராக பணி செய்யாமலேயே, தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதல் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது. தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீ வி ர வா த எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர் தான் இயக்குனர் மணி ரத்னம்.இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கிய திரைப்படங்களாக உள்ளது.அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான செக்கச்சிவந்த வானம் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆனது. அதனை தொடர்ந்து இவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் மணி ரத்னம் மற்றும் நடிகை சுஹாசினியின் மகன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.ஆம் அவரின் பெயர் நந்தன் மணி ரத்னம், பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம் இதோ..

Continue Reading
You may also like...

More in CINEMA

To Top