இந்த குழந்தை யாருன்னு தெரியுமா? இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம்.. யாருன்னு தெரிஞ்சுக்க தொடர்ந்து படியுங்கள்..!

பிரபலங்களை குழந்தைப் பருவ புகைப்படமாகப் பார்ப்பது மிகவும் அழகானது. அது நம்மை வெகுவாக ரசிக்கவும் வைக்கும். அந்த வகையில் இப்போது ஒரு குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.பார்க்கவே துரு, துருவென அழகாக இருக்கும் இந்தக் குழந்தை இப்போது தமிழில் உச்ச நட்சத்திரமாகவும் உள்ளது. அது யார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

இளவயது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சகலதரப்பிலும் மிகப்பெரிய ரசிகர் படையை வைத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் வாழ்வைத் தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது குழந்தப் பருவ புகைப்படம் தான் அது. சிவகார்த்திகேயனின் இந்த முன்னேற்றத்துக்கு அவரது விடாமுயற்சியும், தன்னம்பிக்கையுமே காரணம். சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தைத் தொடர்ந்து தற்போது டாக்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழகத்தில் இயல், இசை, நாடகம், சினிமா, சின்னத்திரை, நாட்டுப்புறக் கலைகளில் சிறந்த பங்களிப்பை அளிப்போருக்கு தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மூத்த நடிகைகள் சரோஜா தேவி, செளகார் ஜானகி, ஜஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, கலைபுலி தாணு வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

சிவகார்த்திகேயனின் இப்போதைய முன்னேற்றத்தை பார்த்து ரசிக்க அவரது தந்தை உடன் இல்லை என்னும் கவலை அவரை மிகவும் சோகத்தில் ஆழ்த்துவது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். சிவகார்த்திகேயனின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *