NEWS
இது சாதாரண ஆடு இல்ல.. கடவுளின் மறு உருவம்… வீடியோ பாருங்க.. நீங்களே சொல்லுவீங்க..!
மனிதர்களை விட மென்மையும், பாசமும் கொண்டவை மிருகங்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நம் தமிழகத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாகவே மிருகங்கள் மூர்க்க குணம் கொண்டவை என்றே நாம் சொல்லி வழக்கப்பட்டு உள்ளோம். ஆனால் அவைகளை நாம் தொந்தரவு செய்யாதவரை, அவை நம்மிடம் அன்பு மழை பொழியக் கூடியவை தான். தமிழில் பிரபல திரைப்பட இயக்குநர் ராமநாராயணனின் பல படங்களிலும் நாய், குரங்கு, ஆடு, ஏன் பாம்பு கூட குழந்தைகளுக்கு உதவுவது போல் காட்சிகள் வரும்.
ஹாலிவுட்டிலும் ஒரு பெண்ணின் மீது கிங்காங் பாசம் காட்டுவதும், ஜங்கிள்புக் சீரியலில் குழந்தை காட்டுக்குள் வளர்வதையும், மிருகங்கள் அதனுடன் நேசம் காட்டுவதையும் நாம் பார்த்திருப்போம். அதையெல்லாம் ஓவர்டேக் செய்யும் வகையில் நம் தமிழகத்திலேயே ஒரு சம்பவம் நடந்துள்ளது. கால்கள் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் செல்லமாக ஆடு ஒன்றை வளர்த்துவந்தார். அந்த ஆட்டை எப்போதும் தன்னுடன் அவர் அழைத்துச் செல்வார். ஆட்டுக்கு தன் எஜமானார் மீது அளவு கடந்த பாசம்.
வீல் சேரில் வரும் தன் மாற்றுத்திறனாளி உரிமையாளருக்காக அந்த ஆடு, தினமும் அவரது சக்கர வண்டியை பின்னால் இருந்து தள்ளிக்கொண்டே செல்கிறது. தினமும் அவர் செல்லும் இடமெங்கும் தன் ஆட்டையும் கூட்டிச் செல்கிறார். ஆடு பின்னால் இருந்து வாகனத்தை தள்ளிக்கொண்டே போகிறது. இதைப் பார்க்கவே நம்மையும் அறியாமல் உடல் சிலிர்க்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.