இதுக்கு டிவி பாக்காமலே இருக்கலாம்! அடுத்த சீசனில் இவர்கள் இல்லையாம்! குக் வித் கோ.மாளி ரசிகர்கள் அ.திர்ச்சி தகவல் இதோ

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பொருத்தவரையில் டிஆர்பியில் சமீபத்தில் பெரிய ஹிட் கொடுத்த நிகழ்ச்சியாக கருதப்படுவது குக் வித் கோ.மாளி நிகழ்ச்சி தான். பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரபாகி வரும் இந்த நிகழ்ச்சி கடந்த இரு சீசன்களை நடத்தி வந்தது.

முதல் சீசனை விட இரண்டாம் சீசன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வந்தது. தற்போது இந்நிகழ்ச்சியில் இறுதி போட்டி சமீபத்தில் எடுக்கப்பட்டது. வெற்றியாளராக அஷ்வின் தேர்வு செய்யப்பட்டார் என்றும் கனி, ஷகிலா ரன்னர் அப்பையும் பெற்றனர் என்றும் இணையத்தில் பரவியது.

இதைதொடர்ந்து மூன்றாம் சீசனும் கூடி சீக்கிரம் ஆரம்பிக்க போவதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் புகழ், சிவாங்கி, பவித்ரா போன்ற பலருக்கும் சினிமாவில் அடுத்தகட்ட வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த குப் வித் கோ.மாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே மூன்றாவது சீசனுக்கான போட்டியாளர்கள் மற்றும் கோ.மாளிகளை விஜய் டிவி நிறுவனம் தேர்வு செய்து விட்டதாம். ஆனால் இந்த முறை இரண்டாவது சீசனில் இருந்த பல கோ.மாளிகள் இடம்பெற மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதிலும் குறிப்பாக குக் வித் கோ.மாளி நிகழ்ச்சி என்றால் ஞாபகத்திற்கு வரும் புகழ் மற்றும் சிவாங்கி ஆகிய இருவரும் அடுத்த சீசனில் இருக்கமாட்டார்கள் என உறுதியாகச் சொல்கிறது விஜய் டிவி வட்டாரம்.

இதற்கு காரணம். புகழ், ஷிவாங்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கவிருப்பதாகவும், கால்ஷீட்டில் நேரம் கிடைக்காது என்ற காரணமும் தானாம். குக் வித் கோ.மாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்து விட்டார்களாம்.

இருந்தாலும் பட தயாரிப்பு நிறுவனங்களிடம் பேசி விஜய் டிவி நிறுவனம் எப்படியாவது இருவரையும் கொண்டு வர முயற்சி செய்யும் என்பது மட்டும் உறுதி.

இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இவர்கள் இருவரும் இல்லை என்றால் அந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் மாதிரி ஒதுக்கி விட வேண்டியதுதான் என்று ஆதங்கமாக கூறி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.