CINEMA
ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகளை பார்த்துள்ளீர்களா? பேரழகில் ஜொலிக்கும் 2வது மகள்- வைரலாகும் புகைப்படம்
தமிழ் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்த நடிகர்களில் முக்கியமானவர் அர்ஜூன், ஒரு காலத்தில் இவரை ராசியில்லாத நடிகர் என ஒதுக்கி வைத்த திரையுலகம் பின்னாளில் இவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்தன.
அந்தளவுக்கு தனது தன்னம்பிக்கையை விடாமல் சூப்பர் டூப்பர் நடிகராக வலம்வந்தார், போலீஸ் அதிகாரியாக அல்லது ரா ணுவ வீ ரராக வலம்வர வேண்டும் என்ற இவரது தந்தையின் ஆசையையும் படங்களில் நடித்து நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறார்.
நடிப்பு மட்டுமல்லாது இயக்குனர், தயாரிப்பாளர், காமெடி என பன்முக திறமை கொண்ட அர்ஜூன் இன்றளவும் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர், அதிலும் மங்காத்தாவில் அஜித்துடன் சேர்ந்து வேற லெவல் நடிப்பை வெளிக்காட்டினார்.
இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு அழகிய மகள்கள் இருக்கின்றனர், இதில் ஐஸ்வர்யா ஏற்கனவே கதாநாயகியாக அறிமுகமாகி விட்டார்.