அள்ளித்தந்த வானம் திரை படத்தில் பிரபுதேவாவுடன் குழந்தை நட்சத்திரத்தில் நடித்த ஜூலியா இது.! இப்படி மடமடவென வளர்ந்து விட்டாரே

தமிழ் சினிமாவில் பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் ஆனால் ஒருசில குழந்தை நட்சத்திரம் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிப்பார், அந்த வகையில் நடிகை கல்யாணியும் ஒருவர், இவரின் இயற்பெயர் பூர்ணிதா ஆனால் சினிமாவிற்காக தனது பெயரை கல்யாணி என மாற்றிக் கொண்டார்.

1990ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார், தனது சிறுவயதிலேயே நடிப்பிற்கு வந்துவிட்டார், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான அள்ளித்தந்த வானம் என்ற திரைப்படத்தில் ஜூலி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார், இதுதான் அவருக்கு முதல் திரைப்படம்.

அந்த திரைப்படத்தின் மூலம் சுட்டித்தனமான தனது நடிப்பை வெளிப்படுத்தினார், அதனால் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன்பின்பு விரிக்க தமிழ் மலையாளம் தெலுங்கு என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன. அள்ளித்தந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிப்பில் வெளியாகி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன் பின்னர் தமிழில் குருவம்மா, ரமணா ,ஜெயம் போன்ற பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

பார்ப்பதற்கு ஒல்லியாக குழந்தை நட்சத்திரம் போல் இருப்பதால் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, நடிகை கல்யாணி சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே டிவி தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் 2001 ஆம் ஆண்டு சாருலதா தொடரில் நடித்து இருந்தார். தொடர்ந்து சினிமாவிலும் சீரியலிலும் கலக்கி வந்த இவர் தொகுப்பாளினி ஆகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் கல்யாணி கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், முதல் கணவர் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது, நீண்ட காலமாக இந்த தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தார்கள் இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது, அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன, அந்தக் குழந்தைக்கு முதல் பிறந்தநாள் வந்துள்ளதால் கொண்டாடி உள்ளார்கள் குடும்பத்துடன்.

இதை பார்த்த ரசிகர்கள் சிறு பெண்ணாக இருந்த கல்யாணியா இது இப்படி குடும்பம் குட்டின்னு மாறிட்டாங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *