செல்லப்பிராணியாக வளர்த்து வரும் விலங்குகளில் மிக முக்கியமானதாக இருப்பது நாய்க்குட்டிகள் தான். பொதுவாகவே நாய்க்குட்டிகள் நாம் செய்வது போன்று பல விஷயங்களை பார்த்து அதுவும் செய்யும். அதற்கு பல விளையாட்டுக்களையும் கற்றுக்கொடுப்பார்கள்.
அந்த நாய்க்குட்டி வீட்டின் ஒரு செல்ல பிள்ளையாக இருக்கும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்குட்டிகளுக்கு பல திறமைகள் இருக்கும் என்றே சொல்லலாம். அதற்கு ஒருமுறை சொல்லிக்கொடுத்தாலும் உடனே அதை திரும்ப செய்யும். இப்படி வளர்க்கப்படும் நாய்க்குட்டிகள் சாகசங்களை கூட செய்துகாட்டும்.
அப்படித்தான் இங்கே ஒரு நாய் செய்த செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு கிளாசில் தண்ணீரை வைத்து அதன் தலையில் வைத்து கீழே விழாமல் மெதுவாக நடந்து வருகிறது. இதனை பார்த்தவர்கள் ஆச்சிரியத்திலும், அதனை பாராட்டியும் வருகினறனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த காணொளி இதோ…