CINEMA
அட விஜே பாவனாவின் கணவரா இவர்?.. 9 வருடங்களுக்கு பிறகு வெளியானது கணவரின் புகைப்படம்!
பிரபல விஜய் ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் பாவனா. இவர் சூப்பர் சிங்கர் ஜோடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.அதன் பின்னர் அடுத்தக்கட்டமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎலில் தொகுப்பாளராக மாறினார்.
இவர் அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் இணையத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்நிலையில், இதுவரை பாவனா கணவரை வெளியே காட்டாமல் இருந்து வந்தார். தற்போது, 9 வருடங்கள் கழித்து கணவர் நிகில் ரமேஷுடன் திருமண நாள் செல்ஃபி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.