TRENDING
அட பிக்பாஸ் விடுங்க.. இனி குக்வித் கோமாளி தான்! படையெடுக்கும் பிரபலங்கள்- காரணம் என்ன?
பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சி அண்மையில் டிஆர்பியில் எகிறி அடித்தது.
இதற்கு, பல ரசிகர்களின் ஆதரவு மேலும், பெருகி வந்தது. காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தங்களின் கெரியர் பிக்கப்பாகி விடும் என்று திரையுலகை சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள்.
மேலும், சின்னத்திரையை சேர்ந்தவர்களோ, பிக் பாஸ் வீட்டில் தங்கினால் பெரிய திரைக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பெயர் கெட்டுப் போய்விடும் என்கிற அச்சம் பலருக்கு இருக்கிறது.
இந்த நிலையில், குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ், சிவாங்கி, பவித்ரா, அஷ்வின் என அனைவரும் பெரிய திரையில் கால் பதித்துள்ளனர்.
இதனால், பிரபலங்கள் பலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு படையெடுப்பார்கள் என எதிர்பார்ப்படுகிறது.