அடேங்கப்பா இந்த திருநங்கைக்கு இப்படியொரு திறமையா? ஜானகி அம்மா போல் அப்படியே பாடி அசத்திய திருநங்கை.. குரலை கேளுங்க சொக்கிப் போவீங்க…!

’திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு திருநங்கையின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாக திருநங்கைகளை பார்க்கும் பலரும் கேலி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் திருநங்கைகளில் வெகுசிலர் தான் தர்மம் எடுத்து வாழ்கிறார்கள். பலரும், தங்களின் சுய உழைப்பால் முன்னேறி நல்ல நிலையை அடைந்திருக்கிறார்கள். இன்று காவல்துறை தொடங்கி, விமான பைலட் வரை திருநங்கைகள் இருக்கிறார்கள். தனித்திறனிலும் பல திருநங்கைகள் ஜொலிக்கிறார்கள். அந்தவகையில் இங்கே திருநங்கை ஒருவர் தன் பாடல்திறனால் ஜொலிக்கிறார்.

அதிலும், ‘சின்ன சின்ன வண்ணக்குயில்..கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா’ பாடலை அவர் படிப்பது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. ஜானகியம்மா போலவே படிப்பதாக இதைக் கேட்ட இணையவாசிகள் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ நீங்களே இதைக் கேட்டுப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *